சோகம் - தெருநாய் கடித்து 3 வயது சிறுவன் பலி.!
three years old boy died for street dog bite in uttar pradesh
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுராவில் கோசி கலான் பகுதியில் நேற்று மதியம் சோபியான் என்ற மூன்று வயது சிறுவன் தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு வந்த ஆறு தெரு நாய்கள் அந்த சிறுவனை சூழ்ந்து கடித்து குதறி இழுத்து சென்றுள்ளன.
இதைப்பார்த்த மற்ற சிறுவர்கள் ஓடிச்சென்று சோபியானின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு, உடனடியாக அங்கு வந்த குடும்பத்தினர் குச்சிகளால் அந்த நாய்களை விரட்டியுள்ளனர். ஆனால், அதற்குள் நாய்கள் தாக்கியதில் சோபியானின் உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அந்த சிறுவனை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால், சிறுவன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three years old boy died for street dog bite in uttar pradesh