திருமலை அன்னப்பிரசாதம் - ஆர்கானிக் அரிசிக்கு பதில் சாதாரண அரிசியா?
tirupati annathanam rice issue
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்துள்ளது. அதில் ஒன்றாக பக்தர்களுக்கு அனைத்து இடங்களிலும் அன்னதானக் கூடம் அமைக்கப்பட்டு அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த அன்னபிரசாதம் தயாரிப்பதற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசியை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட அரிசியை கொண்டு அன்னபிரசாதம் தயாரிப்பதை நிறுத்தி விட்டு, சாதாரண அரிசியை கொண்டு அன்னபிரசாதம் தயார் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜெ.ஷ்யாமள ராவ், கோவில் புரோகிதர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் அன்ன பிரசாத விநியோகம் குறித்து முக்கியமாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர அன்னப்பிரசாதம் தயாரிப்பது குறித்தோ, தயாரிப்பை அதிகரிப்பது குறித்தோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஆனால், ஸ்ரீவாரி கோவிலில் அன்ன பிரசாதம் தயாரிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. சமூக வலைதளங்களில் பரவும் இதுபோன்ற பொய்யான தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம்" என்றுத் தெரிவித்துள்ளது.
English Summary
tirupati annathanam rice issue