திருப்பதி லட்டு விவகாரம்: 4 பேர் கைது.. சி.பி.ஐ.அதிரடி!  - Seithipunal
Seithipunal


திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வழங்கிய தனியார் பால் நிறுவனங்களில் தொடர்புடைய 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து திருப்பதி லட்டு விவகாரம் பக்கதர்களிக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் புதிய சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.அதன்படி, சி.பி.ஐ. கடந்த ஆண்டு அக்டோபரில் 5 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது. இந்தக் குழு திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தனது விசாரணையை நடத்தி வந்தது.

இந்நிலையில், திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வழங்கிய தனியார் பால் நிறுவனங்களில் தொடர்புடைய 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

அதன்படி விபின் ஜெயின், பொமில் ஜெயின்,அபூர்வ சால்டா மற்றும் ராஜசேகரன் ஆகிய 4 பேரை சிபிஐ கைது செய்து,அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirupati laddu case: Four arrested CBI in action!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->