காவிரி நீர் திறப்பு விவகாரம் - தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை.! - Seithipunal
Seithipunal


காவிரி நீர் திறப்பு விவகாரம் - தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!

தமிழ்நாடு அரசு காவிரி நீர் குறித்த உத்தரவுகளை கர்நாடகம் முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணையும், 6-ந் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணையும் நடைபெறவில்லை. 

இதனால், நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி, தமிழ்நாடு அரசின் மனுவை செப்டம்பர் 11 அல்லது 12-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முறையிட்டனர்.

இதையடுத்து நீதிபதி பி.ஆர்.கவாய், காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு செப்டம்பர் 21-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். அதன்படி இந்த மனு இன்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வருகிறது. 

இதற்கிடையே, கர்நாடக அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 22, 23, 24 ஆகிய கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நியாயமற்றது என்று அறிவிக்க கோரியும், தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 27-ந் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்க கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 24-வது கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரியும் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt cauvery water released petition hearing supreme court from today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->