தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழக அரசு தகவல்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 - 2025 கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர்.

அதன் படி இன்று நடைபெற்ற போட்டியில் அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் மோதினர். அப்போது, பீகார் வீராங்கனை ஒருவரின் பவுல் பிளே தொடர்பாக தமிழக வீராங்கனை நடுவரிடம் புகார் அளித்துள்ளதையடுத்து தமிழக வீராங்கனை மற்றும் நடுவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது நடுவர் தமிழக வீராங்கனையை தாக்கியதனால் ஆத்திரமடைந்த பிற தமிழக வீராங்கனைகள் வாக்குவாதம் செய்ய, நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலைகழக மாணவிகள் வந்துள்ளனர். கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கபடி வீராங்கனைகள் பத்திரமாக உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

சம்பவம் நடைபெற்று மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் அனைவரும் பத்திரமாக திரும்ப பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பயிற்சியாளரை கைது செய்ததாக கூறுவது தவறு. அவர் கைது செய்யப்படவில்லை "என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn govt explain about tamilnadu players attack issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->