நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? - இன்று வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள், கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

இதில், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது உள்ளிட்ட முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள், பெற்றோர் என்று பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

இந்த நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகின்றன. இந்தத் தகவல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing neet exam cancelled case in supreme court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->