கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படுபவர் யார்.? இன்று அவருடைய பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் இந்திய முஸ்லீம் தலைவர்களுள் ஒருவரான முகம்மது இசுமாயில் 1896ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார். 

இவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். 

மேலும், இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராகவும், சட்டசபை உறுப்பினராகவும் (1946-52), டெல்லி மேலவை உறுப்பினராகவும் (1952-58), நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் (1962, 1967, 1971) பதவி வகித்துள்ளார். 

இசுமாயில் 1972ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்கு பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 'காயிதே மில்லத் நாகப்பட்டினம் மாவட்டம்" என்று பெயர் சூட்டியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Mohamad Ismail birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->