கோவாவில் 2வது சர்வதேச விமான நிலையம்.! இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி கோவாவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை மோபாவில் இன்று திறந்து வைக்கிறார்.

வடக்கு கோவாவின் பெர்னெம் தாலுகாவில் உள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானத்திற்கான 2016ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கோவாவின் ஒரே விமான நிலையம் தபோலிமில் செயல்பட்டு வந்தநிலையில், தற்பொழுது 2,870 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 2வது சர்வதேச விமான நிலையத்தை மோபாவில் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இந்த விமான நிலையம் சூரிய மின் நிலையம், பசுமை கட்டிடங்கள், ஓடுபாதையில் எல்இடி விளக்குகள், மழை நீர் சேகரிப்பு, மறுசுழற்சியுடன் கூடிய அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 3-டி மோனோலிடிக் பிரீகாஸ்ட் கட்டிடங்கள், ஸ்டேபில்ரோட், ரோபோமேடிக் ஹாலோ ப்ரீகாஸ்ட் சுவர்கள், 5ஜி இணக்கமான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு போன்ற சில சிறந்த இன் கிளாஸ் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மோபா சர்வதேச விமான நிலையத்துடன், நாட்டில் இயங்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 140ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றபோது 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை தற்போது இரு மடங்காகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today PM Modi to open Goa 2nd international airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->