இன்றுத் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த மாதம் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில், புதிய எம்.பி.க்கள் 2 நாட்களாக பதவியேற்றுக்கொண்டனர். 

இந்தக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார்.இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 

இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். தொடர்ந்து நாளைய தினம் நடப்பு 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

இந்த பட்ஜெட் தாக்கல் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஏழாவது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி வரை நடக்கிறது. இதில் மத்திய அரசு ஆறு மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today start budget meeting in parliment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->