சுதந்திர இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட தலைவர் சி.சுப்பிரமணியம் பிறந்த தினம்.!
Today Subramaniam birthday
சுதந்திர இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட தலைவர் சி.சுப்பிரமணியம் 1910ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி பொள்ளாச்சி அருகே செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் பிறந்தார்.
இவர் நாடு விடுதலைப் பெற்ற பிறகு, அரசியலமைப்புச் சட்டம் இயற்றுவதில் பங்கேற்றார். இவரது அரசியல் குரு ராஜாஜி ஆவார்.
1952-1962ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் மாநில அரசில் கல்வி, சட்டம், நிதி, மத்திய எஃகு, சுரங்கத்துறை, உணவுத்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
1969ஆம் ஆண்டு காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காந்தி பக்கம் நின்று கட்சித் தலைவரானார். 1972ஆம் ஆண்டு கோதுமை விளைச்சலில் சாதனை படைக்கச் செய்தார். 1990ஆம் ஆண்டு மகாராஷ்டிர ஆளுநராகப் பதவியேற்றார். இவருக்கு 1998ஆம் ஆண்டு 'பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது.
இந்திய விவசாய வளர்ச்சிக்காக பல திட்டங்களை நடைமுறைப்படுத்திய இவர் 2000ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
Today Subramaniam birthday