ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ரிஷப் பந்த்!
ipl 2025 mega auction updates
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடந்து வருகிறது.
இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணி, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்-யை 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
முன்னதாக, ஷ்ரேயாஸ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு ஏலம் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற வரலாறை ஷ்ரேயாஸ் அய்யர் படைத்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அதனை முறியடித்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணி, ரிஷப்ப் பந்த்-யை 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்துள்ளது.
கடந்தமுறை ஸ்டார்க் 24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்-யை டெல்லி கேபிடல்ஸ் அணி 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் - குஜராத் டைட்டன்ஸ் - 15.75 கோடி ரூபாய்.
தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா - குஜராத் டைட்டன்ஸ் - 10.75 கோடி ரூபாய்
இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் - பஞ்சாப் கிங்ஸ்- 18 கோடி ரூபாய்.
English Summary
ipl 2025 mega auction updates