அசத்தும் இந்திய அணி! நாளைக்குள் ஆட்டம் முடிய வாய்ப்பு!
AUSvIND Border Gavaskar Trophy Jasprit Bumrah
பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் ஆட்டம் பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து 150 ரன்களுடன் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா பதிலுக்கு 104 ரன்களில் ஆல் அவுட் ஆகியது, இதனால் இந்தியா 46 ரன்கள் முன்னிலை பெற்றது.
2-வது நாள் முடிவில், இந்தியாவின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (90 ரன்கள்) மற்றும் கே.எல். ராகுல் (62 ரன்கள்) விக்கெட் இழக்காமல் 172 ரன்களுடன் விளையாடி முடித்தனர். இன்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில், இந்தியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்களின் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்தியா.
(ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் (81-வது சர்வதேச சதம்) குவித்தனர்)
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு பும்ரா ஆரம்ப ஓவரிலேயே மெக்ஸ்வீனியை டக் அவுட் செய்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் நைட் வாட்ச் மேனாக களமிறங்கிய கேப்டன் கம்மின்சை சிராஜ் அவுட் செய்ய, லபுசாக்னேவை பும்ரா வீழ்த்தினார்.
இன்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து உள்ளது. கவாஜா 3 ரன்களுடன் களத்தில் உள்ளார். மேலும், நாளையே இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
English Summary
AUSvIND Border Gavaskar Trophy Jasprit Bumrah