நாளை இந்த மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு.!
Tomorrow local holiday for Karaikal district
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எளிமையான முறையில் நடந்த விழா இந்த ஆண்டு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருக்கல்யாணமும், மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் (சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடும் நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாளை காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவை பிறப்பித்து உள்ளது.
English Summary
Tomorrow local holiday for Karaikal district