விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' – பிரியாமணியின் சமீபத்திய அப்டேட்!
Vijay Starrer Jananayagan Priyamani Latest Update
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியாமணி, விஜயுடன் இணைந்து நடிப்பது குறித்து உற்சாகமான தகவலை வெளியிட்டுள்ளார். “நான் விஜயின் தீவிர ரசிகை, அவருடன் இணைந்து நடிப்பது பெரிய மகிழ்ச்சி. எங்கள் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது, இதற்காக ஆவலாக காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான 'ஜனநாயகன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் குறியீடுகளுடன் வெளிவந்த இந்த போஸ்டரில், எம்ஜிஆர் நடித்த ‘எங்கள் வீட்டு பிள்ளை’ படத்தின் பாடல் வரிகளான “தலைவன் இருக்கிறான், நான் ஆணையிட்டால்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. மேலும், விஜய் சாட்டையை கைப்பிடித்திருக்கும் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
சினிமா பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அரசியலில் முழு கவனம் செலுத்த உள்ள விஜய், தற்போது ‘ஜனநாயகன்’ படத்தை மிகுந்த தீவிரத்துடன் முடிக்கத் திட்டமிட்டு வருகிறார். இதனால் இப்படம் அவருடைய ரசிகர்களுக்குப் பெரிய மைல்கல்லாக அமைவதாக இருக்கும்.
English Summary
Vijay Starrer Jananayagan Priyamani Latest Update