உள்நாட்டு சுற்றுலாவில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது - யோகி ஆதித்யநாத்.! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் இந்திய சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கத்தின் 37வது ஆண்டு விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: 

"கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது அரசு மேற்கொண்ட கடும் முயற்சிகளால் உள்நாட்டு சுற்றுலாவில் உத்தரபிரதேச மாநிலத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளோம். உலகிலேயே மிகப் பழமையான நகரமான காசி இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத் தலைநகரமாக உள்ளது. 

வாரணாசியில், ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் திறக்கப்பட்டு தற்போது ஓராண்டு நிறைவடைந்துள்ளது. வழக்கமாக வாரணாசிக்கு வருடத்திற்கு ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு கடந்த மாதத்தில் மட்டும் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். 

அயோத்தி ஒரு நம்பிக்கையின் மையமாக உள்ளது. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இங்கு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். இங்கு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. 

இதுமட்டுமல்லாமல், அயோத்தியில் சுற்றுலா வளர்ச்சிக்காக பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இந்த பணிகள் அடுத்தாண்டு முடிவடையும் போது, இந்த நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tour Operators Association of India conference minister yogi adhithyanath speach in uttar pradesh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->