20 கி மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட போக்குவரத்து காவலர் - வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


20 கி மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட போக்குவரத்து காவலர் - வைரலாகும் வீடியோ.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை சாலையில் போக்குவரத்து போலீசாரான நாயக் சித்தேஷ்வர் மாலி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் அந்தவழியாக சந்தேகப்படும் வந்த ஒரு காரை நிறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் அந்த காரில் சோதனையிட முயன்றனர். 

அப்போது மதுபோதையில் இருந்த கார் ஓட்டுநர் திடீரென காரை எடுத்துள்ளார். இதில், மாலி காரின் முன்பகுதியில் சிக்கி கொண்டார். ஓட்டுநர் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். 

இதனால், அவர் ஆபத்தான முறையில் சுமார் இருபது கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். இதைப்பார்த்த மற்ற போலீசார் வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று அந்தக் காரை மடக்கி பிடித்தனர். 

அதன் பின்னர் போலீசார் போதையில் இருந்த கார் ஓட்டுநரைக் கைது செய்தனர். பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரை போதை ஆசாமி காரில் முன்புற பகுதியில் வைத்து 20 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்ற வீடியோ வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

traffic cop hit by car then dragged for 20 km in mumbai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->