மேற்கு வங்காளத்தில் தொடரும் சோகம்!...டானா புயலுக்கு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!
Tragedy continues in west bengal cyclone dana death toll rises to 4
வங்கக்கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இவை வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் ஒடிசாவின் புரி- சாகர் தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்க ஆரம்பித்தது. மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசிய இந்த டானா புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தது.
இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தில் மிக கனமழை பெய்து வருகிறது.
டானா புயலால் மேற்கு வங்காளத்தில் 2 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கையோ தற்போது 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த புயலின் காரணமாக மேற்கு வங்காளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
புர்பா பர்தமான் பகுதியில் தன்னார்வலர் ஒருவர் மின் கம்பியை தொட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், ஹவுரா நகராட்சி ஊழியர் ஒருவர் தண்டிப்பாராவில் தண்ணீர் தேங்கிய சாலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
English Summary
Tragedy continues in west bengal cyclone dana death toll rises to 4