ஆந்திராவில் சோகம் : மினி லாரி கவிழ்ந்ததில் மூச்சுத் திணறி 7 பேர் பலி! - Seithipunal
Seithipunal


முந்திரி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம், டி நரசாபுரம் மண்டலம் பொர்ரம்பாளையம் பகுதியில் இருந்து, நிடதவோலு மண்டலம் தாடிமல்லா நோக்கி இன்று  மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. 

தொடர்ந்து  தேவரப்பள்ளி மண்டலத்தில் உள்ள சின்னைகுடம் சிலகா பகால பகுதியில்  மினி லாரி சென்ற போது, சாலையில் இருந்து பள்ளத்தில் இறங்காமல் இருப்பதற்காக திரும்பியபோது ஓட்டுனரின்  கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தில் இறங்கி விளைநிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில்முந்திரி மூட்டைகளுக்கு அடியில்  7 பேர் சிக்கி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து 
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு  பிரேத பரிசோதனைக்காக கோவூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த விபத்திற்கான காரணம்  குறித்து ஏலூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy in Andhra Pradesh 7 people died of suffocation after a mini lorry overturned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->