பெங்களூரில் சோகம்!...6 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில். தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட  மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இந்த ஆண்டில் பருவமழையின்  தொடக்கத்தில் இருந்தே மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே கர்நாடக மாநிலம், தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள பாபுசபாளையவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடி கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகி உள்ளதாகவும், 9 பேர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருவதாகவும், சிலர் கட்டடத்தில் சிக்கி இருக்கலாம் என்று  தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் அங்கு உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy in bengaluru 4 people died in the accident of the collapse of a 6 storey building


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->