தடம் புரண்ட சரக்கு ரயில் - ஆந்திராவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரிலிருந்து செகந்திராபாத்திற்கு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் நல்கொண்டா மாவட்டத்தின் விஷ்ணுபுரம் ரயில் நிலையம் அருகே இன்று மதியம் வந்து கொண்டிருந்தபோது, திடீரென அதன் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 

அப்போது ரயில் மிதமான வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்ததால் ரயில் ஓட்டுநர் உடனடியாக பிரேக்குகளை பயன்படுத்தி ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால் பிற ரயில் பெட்டிகள் தடம் புரளாமல் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே இந்த விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

பின்னர் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக அந்தப் பாதையில் இயக்கப்படும் பிற ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்து சீரமைக்கப்பட்ட பின்னரே ரயில் சேவை மீண்டும் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train derail in andira


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->