ரெயில் பயணிகள் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் புதிய வசதி - விரைவில் அமல்.! - Seithipunal
Seithipunal


இந்த காலகட்டத்தில் வீட்டு பொருட்கள், ஆடைகள், மளிகை பொருட்கள், காய்கறிகள் என்று ஆரம்பித்து தற்போது உணவு வரை அனைத்தும் வீட்டில் இருந்தபடி ஆன்லைனிலேயே வாங்கும் முறை வந்துள்ளது.

இதன் மூலம், மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு கடைகளைத் தேடி அலைந்து நேரத்தை வீணடிக்காமல், வீட்டிற்கே பொருட்களை வரவழைத்து விடுகின்றனர். அந்த வகையில் முக்கியமான ஒன்று உணவு. 

ஏனெனில், நகரங்களின் தங்கி வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பெரியவர்கள் என்று அனைவரும் வேலைக்கு சென்றுவந்த களைப்பில் இருப்பார்கள். அதனால், அவர்கள் உணவு சமைப்பதற்கே நேரம் இல்லாமல் ஆன்லைன் வழியாக சில மொபைல் செயலிகள் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், ரெயில் பயணிகளுக்கு உணவுகளை தயார் செய்து வழங்கி வரும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்திற்கு, ஏற்கனவே, தனி இணையதளம் மற்றும் செல்போன் செயலி உள்ளது. இருப்பினும், இந்த வரிசையில் பயணிகள் வாட்ஸ்அப் மூலமும் உணவு ஆர்டர் செய்யும் புதிய வசதியை ரெயில்வே அறிமுகம் செய்கிறது. 

ஏற்கனவே இந்த வசதி சில குறிப்பிட்ட வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து தடங்களிலும் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி கூடிய விரைவில் அமல் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இது தொடர்பாக ரெயில்வே துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரெயில்களில் இ-கேட்டரிங் சேவைகளுக்கான வாட்ஸ்அப் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர் கருத்து மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மற்ற ரெயில்களிலும் இந்த சேவை அமல்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train passangers order food in whatsapp soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->