முதன்முறையாக திருநங்கைகளுக்கு பிறப்பு சான்றிதழ்.. எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் முதல்முறையாக திருநங்கைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதன்முறையாக திருநங்கைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குனரும் தலைமை பதிவாளருமான பன்வர்லால் பைர்வா ராஜஸ்தானின் முதல் திருநங்கையின் பிறப்பு சான்றிதழை ஜெயிப்பூரை சேர்ந்த நூர் ஷெராவத்துக்கு வழங்கியுள்ளார்.

ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன் திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் இனிய மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திருநங்கைகள் தங்கள் பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transgender birth certificate in rajasthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->