ஆந்திர பிரதேசம் | கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றிய திருநங்கை! குவியும் பாராட்டுக்கள்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம்: ஹயாத் நகரை சேர்ந்த சிறுமி (வயது13). இவர் நேற்று காலை அவரது வீட்டின் முன்பாக சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் வந்தனர். 

சிறுமியின் அருகே வாகனத்தை நிறுத்து முகவரி கேட்பது போல் அருகில் சென்று திடீரென சிறுமியை தூக்கி வாகனத்தில் வைத்துக் கொண்டு அங்குள்ள சர்வீஸ் ரோடு வழியாக சென்றுவிட்டனர். 

பின்னர் அங்குள்ள மறைவான இடத்திற்கு, வாலிபர்கள் சிறுமியை தூக்கிச் சென்ற பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து சிறுமி எப்படியாவது தப்பி பிரதான சாலைக்கு ஓடி வந்து காப்பாற்றுமாறு கத்தி கூச்சலிட்டுள்ளார். 

அப்போது அந்த வழியாக சென்ற திருநங்கை ஒருவர், சிறுமி கத்திய சத்தம் கேட்டு அங்கு சென்றார். அவரை கண்ட வாலிபர்கள் உடனே தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் திருநங்கை அந்த சிறுமியை மீட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை அழைத்து சென்று அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். 

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர். போலீசாரிடம் சிறுமியை பத்திரமாக ஒப்படைத்த திருநங்கைக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transgender saved kidnapped girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->