நாம் அனைவரும் இந்தியராக ஒன்றிணைந்திடுவோம் - டிடிவி தினகரன் குடியரசு தின வாழ்த்து! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள குடியரசு தின வாழ்த்து செய்தியில், "பல்வேறு கலாச்சாரங்களும், பலதரப்பட்ட பண்பாடுகளும் ஒருங்கே அமைந்த இந்திய தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் 74ஆவது குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் நாம் பெருமை கொள்வோம். புவியியல் அமைப்பு, மொழி, இனம், மதம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற உணர்வு கொண்டு நாம் அனைவரும் இந்தியராக ஒன்றிணைந்திடுவோம்.

எந்தப் பேதமும் பார்க்காமல் குடிமக்கள் அனைவரையும் நடுநிலையோடு மதிக்க வேண்டிய அவசியத்தை அரசியலமைப்புதான் கட்டிக்காப்பாற்றுகிறது. 

அதன்வழியில் எல்லாத் தரப்பு மக்களும் ஒற்றுமையோடும், நல்லிணக்கத்தோடும், நிம்மதியோடும் வாழ்வதற்கான சூழலைப் பேணிடவும் இந்நாளில் உறுதியேற்றிடுவோம்.

தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கான பணிகளில் அனைவரும் பங்கு பெறுவோம். ஜனநாயகத்தின் வழி நின்று தமிழக மக்கள் அனைவருக்கும் பயன் தருகிற மாற்றங்களை நிகழ்த்துவோம். உளப்பூர்வமான குடியரசு தின வாழ்த்துகள்!" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran Republic day 2023 wish


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->