டெல்லி : கடும் பனி மூட்டத்தால் 20 விமானங்களின் சேவை பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக இந்தியாவில் உள்ள வட மாநிலங்களில், கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், காலையில் வேலைக்குச்செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

இதற்கு முன்பாக டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபட்டினால், மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வந்த நிலையில், தற்போது நடந்து வரும் குளிர்கால பருவத்தில் நகரின் பல்வேறு பகுதிகளில் மிக கடுமையாக பனி மூட்டம் உள்ளது. 

இந்த பனிமூட்டத்தால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன. இதனால், மக்கள் எந்த நேரத்திலும் அடர்த்தியான ஆடைகளை அணிந்தபடி உள்ளனர். 

இந்நிலையில், விடுமுறை நாளான இன்று குறைவான அளவிலேயே மக்கள் வெளியே வருகின்றனர். இருப்பினும், அவர்கள் வாகனங்களில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், டெல்லி விமான நிலையத்தில் கடும் பனி மற்றும் தெளிவற்ற பார்வை உள்ளிட்ட காரணங்களால், விமானங்கள் காலதாமதத்துடன் வந்து சேருகின்றன. 

அதன்படி, மொத்தம் 20 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், அவை காலதாமதமுடன் வந்து சேரும். காலை ஆறு மணி வரை விமானங்கள் எதுவும் வேறு பகுதிக்கு திருப்பி விடப்படவில்லை" என்று டெல்லி விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty flights delayed for snow fall in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->