உச்சநீதிமன்றத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம்.! - Seithipunal
Seithipunal


உச்சநீதி மன்றத்தின் கொலிஜியம் ஐந்து நீதிபதிகளை உச்சநீதிமன்றத்தின் நீதிபர்களாக நியமனம் செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. மத்திய அரசும் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு உத்தரவிட்டது.

அதன் படி, ஐந்து நீதிபதிகளும் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பொறுப்பேற்று கொண்டனர். இதனால், உச்சநீதிமன்றத்தில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 34ல் 32 இடங்கள் நியமனம் செய்யப்பட்டன. 

இந்த நிலையில் மீதமுள்ள இரண்டு இடங்களையும் நிரப்புவதற்கு கொலிஜியம் முடிவு செய்து, அதற்காக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தல், குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அரவிந்த் குமார் உள்ளிட்ட இருவரையும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமனம்  செய்வதற்கு உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்தது. 

இதைத்தொடர்ந்து, கொலிஜியத்தின் இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் படி, அவர்கள் இருவரையும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் உள்ள முப்பத்திநான்கு இடங்களில் ஏற்கனவே முப்பத்திரண்டு இடங்களைக் நிரம்பிய நிலையில், தற்போது புதிதாக இரண்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்கள் அனைத்தும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two new justice appointed in supreme court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->