வீட்டில் பதுக்கப்பட்ட 14.29 கிலோ தங்கக் கட்டிகள் - போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


வீட்டில் பதுக்கப்பட்ட 14.29 கிலோ தங்கக் கட்டிகள் - போலீசார் அதிரடி.!

மேற்கு வங்கம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தை ஒட்டிய வங்கதேச எல்லையில் விஜய்பூா் கிராமத்தில் கடத்தல் தங்கம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. 

அந்தத் தகவலின் பேரில், பிஎஸ்எஃப் மற்றும் வருவாய் புலனாய்வுத் துறையினா் இணைந்து, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினா்.

அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14.29 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.8.5 கோடி என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் எல்லைக் காவல் படையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் 14.29 கிலோ தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for 14 kg gold hide home in west bengal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->