நொடியில் இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டிடம் - 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் நான்கு மடிகட்டிடம் இடிந்து விழுந்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாபி மாநிலத்தில் உள்ள மொகாலியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 20 வயது பெண் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். 

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அவர்கள் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் பேசுகையில், "குறைந்தபட்சம் நான்கு பேர் இடிபாடுகளுக்குள் 17 மணி நேரத்திற்கும் மேல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை இடிபாடுகளில் இருந்து 60 சதவீத குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died for building collapse in punjab


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->