எதிர்க்கட்சிகள் பாடம் படிக்க வேண்டும் - அமைச்சர் அமித்ஷா.! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சண்டிகர் மாநிலத்தில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதன் பின்னர் அவர் பேசியதாவது:- வருகின்ற 2029-ம் ஆண்டிலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி தயாராக இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சியினர் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால், 2029-ஆம் ஆண்டில் பிரதமர் ஆக மோடி மீண்டும் பதவி ஏற்பார். கடந்த மூன்று தேர்தலிலும் காங்கிரசை விட பா.ஜ.க. கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை.

எதிர்க்கட்சியினர் நிலையற்ற தன்மையை விரும்புகின்றனர். இதனால்தான் பா.ஜ.க. அரசு நீடிக்காது என்றுக் கூறிவருகின்றனர். இந்த பதவிக்காலத்தை முழுமையாக பா.ஜ.க. நிறைவு செய்வதுடன், அடுத்து நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

இதை நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொறுப்பான எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்கள் பாடம் படிக்க வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister amithsha speech about opposition party in chandikar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->