இலங்கை சுதந்திரத்தினவிழாவில் மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


இலங்கை ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி தனது சுதந்திர தின விழாவைக் கொண்டாடி வருகிறது. அதன்படி, பிரவரி 4-ம் தேதியான நேற்று இலங்கையில் 75-வது சுதந்திர தினம் கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

அந்த விழாவில், பங்கேற்பதாக இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் இரண்டு நான் பயணம் மேற்கொண்டார். அங்கு இவர், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்தார். 

இந்த பயணம் குறித்து, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

"இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் அண்டை நாடு மற்றும் நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பிக்கை உடைய பங்காளியாகவும், நண்பராகவும் உள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister v muralidharan participate in srilangan independance day function


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->