கால்வாயில் தூக்கி வீசப்பட்ட 2 வயது குழந்தை... காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், மதியாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சுலேமான். இவரது இரண்டு வயது மகளை நேற்று முன்தினம் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர் குழந்தை காணவில்லை என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் சுலேமான் வீட்டிற்கு சென்றபோது அங்கு அவர் இல்லை தேடியும் கிடைக்கவில்லை. 

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது அதில் குழந்தை தந்தை சுலேமான் உடன் செல்வது பதிவாகி இருந்தது. 

இதுகுறித்து போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்திய போது இதற்கு முன்பும் அவரது இரண்டு குழந்தைகள் மர்ம முறையில் காணாமல் போனதாக சிலர் தெரிவித்துள்ளனர். 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுலேமானை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் தன் குழந்தையை கால்வாயில் தூக்கி வீசியது தெரியவந்தது. 

இது குறித்த தீவிர விசாரணையில் அவர் தெரிவித்திருப்பதாவது, வீட்டில் இரண்டு வயது பெண் குழந்தையும் அவரது சகோதரனும் சண்டை போட்டதால் ஆத்திரமடைந்து இரண்டு வயது பெண் குழந்தையை தூக்கி கால்வாயில் வீசியதாக சுலைமான் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சுலேமானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் கால்வாயில் வீசப்பட்ட குழந்தையின் சடலத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP 2 year old child thrown canal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->