லவ் ஜிகாத்: 20 வருடம் சிறை, ரூ.5 லட்சம் அபராதம்! அதிரடியில் உத்தர பிரதேச அரசு! - Seithipunal
Seithipunal



இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சிலர் லவ் ஜிகாத் என்ற பெயரில், இந்து மதத்தை சேர்ந்த பெண்களை திருமணத்தின் மூலம் மதம் மாற்றுவதாக பாஜகவை சேர்ந்த அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், பாஜக ஆளுங்கட்சியாக உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த லவ் ஜிகாத்திற்கு எதிராக கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. 

இந்த சட்டத்தின்படி ஒரு நபர் திட்டமிட்டு ஒரு பெண்ணை காதலித்து, அவரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, திருமணம் செய்து கொண்டால். அந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்படும்.

மேலும் இப்படி முறைகேடான வகையில் திருமணம் செய்தவரை ஜாமினில் வர முடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்க இந்த சட்டம் வழி வகுத்துள்ளது. 

இந்நிலையில், இந்த லவ் ஜிகாத் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உத்திரப்பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

அதன்படி இந்த மதமாற்ற தடைச் சட்டம் 2024 சட்ட திருத்தத்தை சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் இன்று அம்மாநில சட்டசபையில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி. 10 ஆண்டு சிறை தண்டனைக்கு பதிலாக 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்றும், அபராத தொகை 50 ஆயிரத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் லவ் ஜிகாத் விவகாரத்தில் பாதிக்கப்படும் பெண் அல்லது அவர்களின் பெற்றோர். உடன் பிறந்தோர் புகார் கொடுத்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை மாற்றி, இனி யார் புகார் கொடுத்தாலும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP Govt Love Jihad Life Imprisonment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->