சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து - போலீசார் எச்சரிக்கை.!!
up police annaounce license cancelled for namaz on road
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட்டில் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக, சாலைகளில் தொழுகை நடத்துபவர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து மீரட் எஸ்.பி. தெரிவித்துள்ளதாவது:- "தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும். யாரும் சாலைகளில் தொழுகை நடத்தக்கூடாது. இந்த எச்சரிக்கையை மீறுபவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றுத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா தெரிவித்துள்ளதாவது:- "மாவட்ட மற்றும் காவல் நிலையங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியதன் அடிப்படையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பதட்டம் மிக்க பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமைதியைப் பேணுவதற்கும், வரவிருக்கும் பண்டிகைகளை சீராகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும், நிர்வாகம் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
up police annaounce license cancelled for namaz on road