மேம்படுத்தப்பட்ட 'அக்னி 5' ஏவுகணை.! 7000 கீ.மி வரை இலக்கை தாக்கும் என தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்தியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 'அக்னி 5' ஏவுகணையை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக ஏவியது. மூன்று நிலை திட எரிபொருள் எஞ்சினை கொண்ட இந்த ஏவுகணை, 5000 கிமீ வரையிலான இலக்குகளை துல்லியத்துடன் தாக்கும் திறன் கொண்டது.

இந்நிலையில் தற்போது அக்னி ஏவுகணையின் எஃகு உள்ளடக்க பொருட்களை, கலப்பு உலோகம் பொருட்கள் கொண்டு மாற்றியமைத்ததன் மூலம் அக்னி 5 ஏவுகணையின் எடை 20 சதவீதம் குறைந்துள்ளதாக டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ஏவுகணையின் தாக்கம் திறன் அதிகரிக்கும் என்றும், 7000 கீ.மி தூரமுள்ள இலக்குகளை சென்று துல்லியமாக தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் பெய்ஜிங் நகரம் உட்பட சீனாவின் வடக்கு முக்கிய பகுதிகளை அக்னி 5 ஏவுகணையால் துல்லியமாக தாக்க முடியும் என்று பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Upgraded agni 5 missile hit target up to 7000 km


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->