ஜி-20 மாநாடு அமைச்சர்கள் கூட்டம் - அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் டெல்லி வருகை.!
US Secretary of State india come for g 20 ministers meeting
இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெற உள்ளது. இதற்காக, நாட்டின் தலைநகரான டெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 உள்ளிட்ட தேதிகளில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஜி-20 அமைப்புகளில் உறுப்பினர்களாக இல்லாத நாடுகள் மற்றும் நாற்பது நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில், ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரவ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். சர்வதேச அளவில் இந்தியா செலுத்தி வரும் செல்வாக்கு குறித்தும் அவர் பேசுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி பிளிங்கன் தலைநகர் டெல்லிக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
அதுமட்டுமல்லாமல், அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவர் நாளை நடைபெறும் குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.
மேலும், இந்தக் கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி, அதிகரித்து வரும் பணவீக்கம், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை குறைதல் மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றை சமாளிக்கும் வழிகள் குறித்தும் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர்.
English Summary
US Secretary of State india come for g 20 ministers meeting