ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கூறிய ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த உயா்நிலைக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. 

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வருகின்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 

அதாவது: "நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டுமென்றால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும். மற்ற 5 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

 நாடாளுமன்ற அவைகள் நவம்பர் 25ஆம் தேதி கூடுகிறது. பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one country one election bill submit in parliment inter session meeting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->