யூ.டி.எஸ். செயலி மூலம் டிக்கெட் விற்பனை இரு மடங்காக அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள், பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்காமல் இருப்பதற்காக, தானியங்கி எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தற்போது செல்போனில் யூ.டி.எஸ். செயலி மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் வந்துள்ளது. 

இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும், யூ.டி.எஸ். செயலி மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறை குறித்து விளக்கி கூறவும், பிரசாரம் செய்யவும் மூத்த ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டது. அதன்படி அவர்களும், இந்த செயலி குறித்த விபரங்களை, பயணிகளுக்கு விளக்கி கூறினர். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 26 ஆயிரம் பயணிகள், யூ.டி.எஸ். செயலி மூலம் பயணசீட்டுகள் பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் யூ.டி.எஸ். செயலி மூலம் பயணசீட்டு பெறுபவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரமாக உயர்ந்தது. இதன் மூலம், செல்போன் யூ.டி.எஸ். செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:- 

யூ.டி.எஸ். செல்போன் செயலியில், நமது செல்போன் எண்ணை உள்ளீடு செய்து ஓ.டி.பி. எண் பெற்று, அதில் நுழையலாம். இதனால் பாஸ்வேர்டு என்ற சங்கேத வார்த்தையை ஞாபகம் வைத்திருக்க வேண்டியதில்லை. இதுபோல், ரெயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால் வீட்டிலிருந்தபடியே பயணச்சீட்டு பதிவு செய்யலாம். தற்போது அதில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் செல்போன் பயணச்சீட்டு மூலம் பயணம் செய்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uts app tickets double sales


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->