"ஹெலிகாப்டர் முன் செல்பி".. இறக்கை வெட்டி உயிரிழந்த அரசு அதிகாரி..! - Seithipunal
Seithipunal


செல்பி எடுக்க முயன்ற உத்தரகாண்ட் அரசு அதிகாரி ஹெலிகாப்டர் இறக்கை வெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உத்தரகாண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் நிதிக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றி வந்தவர் ஜிதேந்திர குமார் சைனி. இந்நிலையில் இன்று அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் கேதார்நாத் சென்ற ஜிதேந்திர குமார் சைனி, அங்கு ஹெலிகாப்டர் முன் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

அப்பொழுது நிற்காமல் சுற்றிக் கொண்டிருந்த ஹெலிகாப்டரின் இறக்கைகள் செல்பி எடுக்க முயன்ற ஜிதேந்திர குமார் சைனியின் தலை, உடம்பில் வெட்டப்பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ஜிதேந்திர குமார் சைனி உயிரிழந்தார். இச்சம்பவம் சக அதிகாரிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டரின் பாதுகாப்பை சரிபார்க்கும் பணி நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttarkhand government Officer who tried to take a selfie in front of a helicopter died after his wing was chopped off in kedarnath


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->