உயிர்பலி வாங்கும் வெப்ப அலை! 6 வீரர்கள் பலியான பெரும் சோகம்! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலம் மிர்ஷாபூரில் வெப்ப அலை காரணமாக தேர்தல் பணி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஆறு ராணுவ வீரர்கள் பலியான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் 16 பேர் இந்த வெப்ப அலை காரணமாக பலியாகி உள்ளனர்.

இன்று சென்னையில் பள்ளி பள்ளி மாணவர் ஒருவரும் இந்த வெப்ப அலை காரணமாக பலியாகி உள்ளார். இதற்கிடையே ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இந்த வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம், மிர்ஷாபூரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 23 ராணுவ வீரர்கள் கடுமையான கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் ஆறு வீரர்கள் சிகிச்சை பலனின்றி பலியான நிலையில், இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியான 6 ராணுவ வீரர்களும் அதிகபட்ச காய்ச்சல் மற்றும் ரத்த கொதிப்பு, சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த வீரர்களுக்கு மூலச் சாவு ஏற்பட வாய்ப்புகள் இருந்ததாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UttarPradesh 6 Army man Death in Heat wave


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->