அடுத்தடுத்து நடந்த கொடூர விபத்து! 14 பேர் பலி!
Uttarpradesh car bus Road Accident
உத்தர பிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்தும் தண்ணீர் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர்.
லக்னௌவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட டபுள் டெக்கர் பேருந்து, லக்னௌ-ஆக்ரா விரைவுச் சாலையில் பயணிக்கும் போது தண்ணீர் டேங்கர் லாரியுடன் மோதியது.
காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் 8 பேர் உயிரிழக்க, 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக சித்ரகூடில் நடந்த மற்றொரு விபத்தில் 6 பேர் உயிரிழந்ததோடு, 5 பேர் காயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கதிமாவைச் சேர்ந்த 11 பேர் அஸ்தியை கரைத்து திரும்பிக் கொண்டிருந்த போது டிரக்குடன் மோதி, பின்னர் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
English Summary
Uttarpradesh car bus Road Accident