ரஜினிகாந்த் கர்நாடகத்திற்குள் நுழையக்கூடாது - மிரட்டல் விடுத்த வாட்டாள் நாகராஜ்.!
vattal nagaraj threaten to actor rajinikanth not entered in karnataga
ரஜினிகாந்த் கர்நாடகத்திற்குள் நுழையக்கூடாது - மிரட்டல் விடுத்த வாட்டாள் நாகராஜ்.!
கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் கடந்த சில நாட்களாகவே காவிரி நீர் திறப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குத் தொடரப்பட்டு வருகிறது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இரண்டு தரப்பு மனுக்களையும் நிராகரித்தது.
மேலும், "காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தது. இந்த நிலையில், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்திற்கு நீர் திறப்பதை கண்டித்து அம்மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தை உடனடியாக திரும்ப பெறுமாறு டி.கே.சிவக்குமார் அறிவுறுத்தியுள்ளார். பொது முடக்கத்தால் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, கர்நாடகத்தில் தமிழ்ப்படங்களை ஓடவிடமாட்டோம் என்றும், ரஜினிகாந்த் கர்நாடகத்திற்குள் நுழையக்கூடாது என்றும் வாட்டாள் நாகராஜ் ஆவேசமாக பேசியுள்ளார். மேலும், கர்நாடகத்தில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்களோ அவர்களை காவிரி தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று கூற முடியுமா? என்ற அவர், தமிழர்களை தமிழ்நாட்டுக்கே அழைத்துக்கொள்ளுங்கள்" என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
vattal nagaraj threaten to actor rajinikanth not entered in karnataga