தொடர் உயிரிழப்பு: வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு.!
Velliangiri goers attention
தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி கோவிலுக்கு வருடம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
ஏழுமலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்கள் சென்று வருகின்றனர்.
பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மலை ஏரி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதுபோல் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் என 5 பேர் ஒரே மாதத்தில் உயிரிழந்தது சிவ பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கோவில் நிர்வாகம் மூச்சு திணறல், இருதய நோய், உடல் பருமன், வயது முதியவர்கள் ஆகியோர் வெள்ளியங்கிரி மலை ஏர வேண்டாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Velliangiri goers attention