BREAKING: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இருந்த போதிலும் கூட  கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜ்யசபா உறுப்பினர்கள் 875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Venkaiya Naidu tested covid positive


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->