ரியல் ஹீரோயின்! 10 அடி பாம்பை அசால்டாக கைகள் பிடித்து பையில் போடும் இளம்பெண்! - Seithipunal
Seithipunal


சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள நிறுவனத்தில் புகுந்த பாம்பை பெண் ஒருவர் அசால்டாக கைகள் பிடித்து பையில் போடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

சட்டிஸ்கர் மாநிலம்  பிளாஸ்பூரில் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில் திடீரென  பாம்பு புகுந்ததால்  அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பதட்டம் அடைந்து அலறியபடி வெளியே ஓடி வந்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிப்பதில் வல்லமை படைத்த இளம் பெண்ணை பாம்பை பிடிக்க அழைத்ததாக கூறப்படுகிறது. செவிலியராக பணிபுரியும் அப்பெண் அவ்வப்போது பாம்பு பிடிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.


சம்பவம் அறிந்து அலுவலகத்துக்குள் வந்த இளம்பெண் எந்தவித பயமும் இன்றி வெறுங்கையில் பாம்பை பிடித்து சாக்கு பையில் போடும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்தப் பெண், இது விசேஷ தன்மை இல்லாத சாரை பாம்பு வகையை சேர்ந்தது தான் பயப்படத் தேவையில்லை என்று பேசியவாறு பாம்பை பிடித்து சாக்குப்பையில் போடுகிறார்.

இதனை அந்த அந்த பாம்பு பிடிக்கும் பெண்ணுடன் வந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து  சமூக வலைதளங்களில் உண்மையான ஹீரோயின் என்ற தலைப்புடன் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி  உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

video shows a woman catching a snake that entered an institution in Chhattisgarh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->