இது விளையாட்டின் ஒரு பகுதி - தகுதி நீக்கம் குறித்து வினேஷ் போகத்.! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டு தொடர் நடைபெற்று வருகிறது. இந்தது தொடரில், இந்தியா இதுவரைக்கும் 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா, யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் உள்ளிட்டோர் மோதினர். அதில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இதற்கிடையே, வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார்.

இது இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மகளிர் தேசிய பயிற்சியாளர் வீரேந்தர் தஹியா மற்றும் மஞ்சீத் ராணி உள்ளிட்டோர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை சந்தித்தனர். அதன் பின்னர் அவர்கள் தெரிவித்ததாவது:-

"தகுதி நீக்கம் மல்யுத்தக் குழுவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. செய்தி வெளியான பிறகு வீராங்கனைகள் மிகவும் மோசமாக உணர்ந்தனர். நாங்கள் வினேஷைச் சந்தித்து ஆறுதல் கூற முயற்சித்தோம். அவள் தைரியமாக இருந்தாள். அவர் எங்களிடம்," நாங்கள் பதக்கத்தைத் தவறவிட்டது கடினமான துரதிர்ஷ்டம். ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதி" என்று கூறியதாக தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vinesh phogat speech about disqualify


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->