ஆந்திர தலைநகரமாக விசாகப்பட்டினம் எப்போது செயல்படும்? - முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திரா, தெலுங்கானா என 2 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதில், ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் உருவாக்கப்பட்டது.

அதன்படி, விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகரமாகவும், அமராவதியை சட்டமன்றத் தலைநகரமாகவும், கர்நூலை நீதித்துறையின் தலைநகரமாகவும் ஆந்திர அரசு அறிவித்திருந்தது.

 இதனிடையே கடந்த ஜனவரி மாதம் ஆந்திர மாநிலத்தின் தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். இதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது. 

இதனையடுத்து விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி  அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திர மாநில தலைநகரம் விசாகப்பட்டினத்தில் செயல்படும் எனவும், நானும் அங்கேயே குடியேறுவேன் ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Visakhapatnam is the capital of Andhra Pradesh from September


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->