சாலையில் உருண்ட தண்ணீர் லாரி.... அதிர்ச்சியான விபத்து வீடியோ...
Water truck overturns road Shocking accident video
கர்நாடகா பெங்களூருவில் தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது.அந்த விபத்தின் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் டேங்கர் லாரி, சாலையில் கவிழ்ந்துள்ளது. அதன் பிறகு டேங்கர் லாரிக்கு பின்னால் வந்த லாரியின் ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தினார்.
இந்த விபத்தினால் டேங்கர் லாரியிலிருந்த தண்ணீர் சாலையில் முழுவதுமாக கொட்டியது.இவ்விபத்தில் தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுநர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் டேங்கர் லாரியின் ஓட்டுநர் மற்றும் அவருடன் பயணித்தவர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் இந்த வீடியோ தற்போது எக்ஸ் தளப்பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
Water truck overturns road Shocking accident video