துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம்; இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி - Seithipunal
Seithipunal


துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் என்று இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் உறுதி அளித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல் குறித்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறியதாவது; நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிர்களை இழந்தனர்.
இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் உறுதியாக நிற்கிறது. தேவைப்படும் இடங்களில் பிரான்ஸ்  மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடரும். பிரான்சின் ஒற்றுமை மற்றும் நட்பை அவர்கள் நம்பலாம் என்று கூறியுள்ளர். 
மேலும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருந்துள்ளோம். எப்போதும் ஒற்றுமையாக இருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We stand by you in a time of distress French President assures India


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->