கொல்கத்தா : ஜி-20 மாநாட்டில் மேளதாளத்துடன் வெளிநாட்டு குழுவிற்கு வரவேற்பு.!
welcomes with drums to foreigners for g 20 confernce in culcutta
கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டிற்கு பின்பு, ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று கொண்டார்.
இது குறித்து பிரதமர் மோடி தெரிவித்ததாவது, "நமது நாடு சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடிய நிலையில், 'ஜி-20' அமைப்புக்கு தலைமை ஏற்பது பெருமைக்குரிய ஒன்று. அதுமட்டுமல்லாமல், இது நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஆகும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இந்தியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி ஜி-20 அமைப்புக்கு தலைமை பொறுப்பு ஏற்றது. அதன் பின்னர் இந்தியாவில் ஜி-20 தலைமைத்துவத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் படி, நாட்டின் பல்வேறு நகரங்களில் மாநாட்டு கூட்டங்கள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதனை முன்னிட்டு, மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நகரில் ஜி-20 மாநாடு முதன்முறையாக நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், கலந்துகொள்வதற்காக இன்று வெளிநாட்டு குழுவினர் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.
அங்கு அவர்களுக்கு, மேளதாளங்கள் முழங்க பாரம்பரிய நடனங்களுடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மாநாட்டுக்கு வருகை தரும் வழி நெடுவிலும் வரவேற்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் இந்த மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
English Summary
welcomes with drums to foreigners for g 20 confernce in culcutta