மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக பதவியேற்கும் சி.வி.ஆனந்த போஸ்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னராக மணிப்பூர் மாநிலத்தின் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்தார். 

இது குறித்து, குடியரசுத்தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அஜய்குமார் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பொறுப்பேற்க உள்ளார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

இதுமட்டுமல்லாமல் இவர், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா. அதிகாரி என்று பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

west bengal new governor cv anand bose appointed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->